கொழும்பு - பம்பலபிட்டிய இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றதுடன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டுள்ளார்.
இதேவேளை கல்லூரி மாணவர்களால் பல நிகழ்வுகளும் நாடத்தப்பட்டுள்ளது.
மேலும் இதன் போது கடந்த 2015ஆம் ஆண்டு கற்றல் நடவடிக்கைகளிலும் இணை பாடவிதான செயற்பாடுகளிலும் சாதனைகளை நிலை நாட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.