200 சீன ஜோடிகளுக்கு இலங்கையில் திருமணம்!

Report Print Samy in நிகழ்வுகள்
715Shares

சீனாவைச் சேர்ந்த 200 ஜோடிகளுக்கு இலங்கையில் ஒரே நேரத்தில் திருமணம் இடம்பெறவுள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இதனை அறிவித்தார்.

இலங்கையில் பாரிய திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு சீனர்களும், இந்தியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே கொழும்பில் 200 சீன ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் பாரிய திருமணத்தை நடத்துவதற்கு முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய நிகழ்வுக்கு பாரிய இடவசதிகளும், அரங்குகளும் தேவைப்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எப்போது 200 சீன ஜோடிகளுக்கு இலங்கையில் திருமணம் இடம்பெறப் போகிறது என்ற தகவலை அமைச்சர் ஜோன் அமரதுங்க வெளியிடவில்லை.

- Puthinappalakai

Comments