சிறப்பாக இடம்பெற்ற ஒளி விழா

Report Print Navoj in நிகழ்வுகள்
36Shares

செங்கலடி பிரதேச செயலகத்தில் இவ்வாண்டிற்கான கிறிஸ்து பிறப்பு ஒளி விழா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு செங்கலடி புனித நிக்கோலஸ் ஆலய பங்குத்தந்தை அருட்பணி பு.மகிமைதாஸ், செங்கலடி மெதடிஸ்த திருச்சபை போதகர் அருட்.சாமுவேல் சுபேந்திரன் மதகுருமார்களாக கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்வை சிறப்பிக்க பாலர் பாடசாலை மாணவர்களின் நடனம், பாடல் என்பனவும், செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கரோல்கீதம் என பல நிகழ்வுகள் நடைபெற்றன.

கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களும் நத்தார் தாத்தாவினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments