நுவரெலியாவில் தேசிய தைப்பொங்கல் விழா!

Report Print Kamel Kamel in நிகழ்வுகள்
41Shares

தேசிய தைப்பொங்கல் விழா இன்றைய தினம் நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.

நுவரெலியா நகர சபை மைதானத்தில் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் அரசாங்க அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

ஹட்டனில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் விழா

தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒருநாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடுபோன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில்வழிபடுவார்கள்.

ஆண்டுதோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருவது வழமையாகும்.

அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துதை பொங்கல் பண்டிகையை 14.01.2017 சனிக்கிழமை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

ஹட்டன் பகுதியில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரம்மஸ்ரீ. இ.பூர்ணசந்திரானந்த குருக்கள் தலைமையில் தை பொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments