யாழ். சண்டிலிப்பாயில் சிறப்புற இடம்பெற்ற சிறுவர்தின விழா

Report Print Thamilin Tholan in நிகழ்வுகள்

யாழ். சண்டிலிப்பாய் மணிமேகன் முன்பள்ளியின் சிறுவர் தினவிழா மற்றும் ஆசிரியர் தினவிழா என்பன முன்பள்ளியின் தலைவி ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை(05) முன்பள்ளியில் நடைபெற்றுள்ளது.

குறித்த விழாக்களில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், வலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன் ஜிப்றிக்கோவும் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது, தனது 2017ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து முன்பள்ளிக்கான பிளாஸ்ரிக் கதிரைகளை வடமாகாண சபை உறுப்பினர் முன்பள்ளி நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார்.

இந்த விழாவில் முன்பள்ளிச்சிறார்கள் அனைவரும் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும், கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், வெற்றிபெற்ற சிறார்களுக்கான பரிசில்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, விருந்தினர்களுடன் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊரவர்கள் எனப்பலரும் விழாக்களில் கலந்துகொண்டுள்ளனர்.