கொழும்பு இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவின் கலை விழா!

Report Print Thileepan Thileepan in நிகழ்வுகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் ஆரம்ப பிரிவு பெருமையுடன் வழங்கும் கலை விழா நாளை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் ப.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

கொழும்பு இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு-04இல் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதில் முதன்மை விருந்தினராக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கல்வித்துறை தலைவர் கலாநிதி சசிகலா குகமூர்த்தி கலந்துகொள்ளவுள்ளார்.

சிறப்பு விருந்தினராக அகில இலங்கை இந்து மன்றப் பொருளாளர் அபிராமி கைலாசபிள்ளை உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது ஆரம்ப பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.