கொழும்பில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ள ஆறுமுக நாவலர் விழா!

Report Print Akkash in நிகழ்வுகள்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா மற்றும் குருபூஜை நிகழ்வுகள் என்பன கொழும்பில் வெகு சிறப்பாக இடம்பெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு - பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நிகழ்வுகளை சிறப்பாக நடத்துவதற்கான ஒழுங்குகளை முன்னெடுத்துள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை மற்றும் ஈழத்து திருநெறி தமிழ் மன்றம் என்பன ஒழுங்கு செய்துள்ள இந்நிகழ்விற்கு, இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றம் என்பன அனுசரனை வழங்கியுள்ளது.


Latest Offers