ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 189வது வருடாந்த திருவிழா

Report Print Thirumal Thirumal in நிகழ்வுகள்

ஹட்டன் திருச்சிலுவை ஆலய புனித அன்னம்மாளின் 189வது வருடாந்த திருவிழா இன்று கண்டி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வியானி பெர்ணான்டோ ஆண்டகை அவர்களால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

ஹட்டன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் பங்கு தந்தை லெஸ்லீ பெரேரா தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று திருப்பலி பூசையின் பின் புனித அன்னம்மாளின் திருச்சொரூபம் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து ஹட்டன் பிரதான பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் ஹட்டன் மல்லியப்பு சந்தி வரை சென்று ஆலயத்தை வந்தடைந்தது.

காலை 7.30 மணிக்கு சிங்களம், தமிழ் இருமொழிகளிலும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

அதன்பின் 10.30 மணியளவில் விசேட திருப்பலியும் நடைபெற்றது. இதில் அதிகளவான கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.