யாழ். நல்லூர் தேர்த்திருவிழாவில் அலையென திரண்டுள்ள பக்தர்கள்!

Report Print Dias Dias in நிகழ்வுகள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது.

கடந்த மாதம் 16ஆம் திகதி ஆலயத்தின் திருவிழாவானது கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில் இன்று சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தேரில் வலம் வந்து காட்சி தரும் வேலனை காண பெருந்திரளான மக்கள் அங்கு திரண்டுள்ளனர்.

இந்த மக்கள் கூட்டத்தில் உள்நாட்டவர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளதுடன், பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.

இதேவேளை தற்போது யாழ்ப்பாணம் முழுவதும் திருவிழா களைகட்டியுள்ளதுடன், மக்கள் அனைவரும் மிகவும் பக்தியுடன் தேரின் வடம் பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.