மட்டக்களப்பில் ஆன்மீக பாதயாத்திரை

Report Print Navoj in நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.

மட்டக்களப்பு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற பூசையைத் தொடர்ந்து யாத்திரை இடம்பெற்றுள்ளது.

வெருகல் சித்திரவேலாயுதர் ஆலய மஹோற்சவத்தினை முன்னிட்டு இவ் ஆன்மீக பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு, பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

ஆறு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை எதிர்வரும் 27ம் திகதி வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையும், இப்பாத யாத்திரையில் 200 மேற்பட்டோர் நந்திக் கொடி ஏந்தி ஆரோகரா கோசத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.