கொழும்பு விநாயகர் ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற சங்கடகர சதுர்த்தி

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு, செட்டியார் தெரு விநாயகர் ஆலயம் மற்றும் கொட்டாஞ்சேனை பிள்ளையார் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விஷேட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கலம் பூ மாலை மற்றும் அருகம் புல் மாலை அணிவித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து விநாயகரை வணங்கும் வழிபாடு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

அங்காரகன் விநாயகர் விரதத்தை அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றாகப் பதவி பெற்றார். இதனால் சங்கட சதுர்த்தி விரதமானது அங்கார சதுர்த்தி விரதமென்றும் அழைக்கப்படுகின்றது.

Latest Offers