மன்னார் மறைசாட்சியர்களின் புனித நிலைப்படுத்துவதற்கான முயற்சி

Report Print Dias Dias in நிகழ்வுகள்

அதிவணக்கத்திற்குரிய ஆயர் இம்மானுவேல் பெர்ணாண்டோ அடிகளார் அண்மையில் ரோமபுரியை சென்றடைந்தார்.

மன்னார் மறைசாட்சிக்கான புனித நிலைக்கு உயர்த்துவதற்கான முன்னெடுப்புக்களை செய்துவருகின்ற அருட்பணி.தோமஸ் அடிகளாரை ஆயர் சந்தித்துள்ளார்.

அத்தோடு வத்திக்கானிலுள்ள கர்தினாலுடன் மன்னார் மறைசாட்சியார் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

மேலும், அருட்பணி. தோமஸ் அடிகளார், மன்னார் மறைசாட்சியர் என்ற தலைப்பில் 8 பக்கங்களைக் கொண்ட ஒரு ஆய்வுக்கட்டுரையை எடுத்துரைத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஆயர்,

“மன்னார் மறைசாட்சிகள் இலங்கை முழுவதும் நினைவு கூறவேண்டிய ஒரு நாளை பிரகடனப்படுத்துவதற்கு ஆலோசிப்பதாகவும், அத்தோடு மன்னார் மறைசாட்சியர் பற்றிய மேலும் பல ஆவணங்களை தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட இருப்பதாகவும் கூறினார்.

அத்துடன் தொடர்ந்து இக்காரணத்திற்காக மன்னார் மறைமாவட்டத்தில் நியமிக்கப்பட்ட குருக்கள் கொண்ட குழுவை மேலும் பலப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

மன்னார் மறைசாட்சிகளை புனிதர்களாக திருநிலைப்படுத்துவதற்கு தொடர்ந்து இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பான ஆய்வுகளை இலங்கையிலுள்ள ஆவணகாப்பகங்களிருந்து தகவல் திரட்டப்படுவதாகவும்” குறிப்பிட்டார்.அத்தோடு அருட்சகோதரர் இம்மானுவேல் றொகேசியஸ் ரோமபுரியிலுள்ள இயேசு சபைக்குச் சொந்தமான நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை அருட்பணி.தோமஸ் அடிகளாரிடம் கையளித்துள்ளார்.

அத்தோடு ஆயர், தொடர்ந்தும் இவ்வாறான தகவல்களை திரட்டுமாறு அருட்சகோதரர் இம்மானுவேல், றொகேசியஸை கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest Offers