வவுனியா கிறிஸ்து அரசர் ஆலயப் பெருவிழா

Report Print Theesan in நிகழ்வுகள்

வவுனியா - குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான கூட்டுத்திருப்பலியும், திருச் சொரூப பவனியும் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டுத்திருப்பலியும், திருச் சொரூப பவனியும் நேற்று காலை பங்குத்தந்தை அருட்பணி எஸ். ஜெயபாலன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இவ் ஆலயத்தின் திருவிழாவிற்கான நவநாள் ஆராதனைகள் கடந்த 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளன.

இதையடுத்து நேற்று திருவிழா கூட்டுத்திருப்பலியினை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்டர் சோசை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி நிறைவில் கிறிஸ்து அரசரின் திருச்சொரூபம் குருமன்காடு சந்தி வழியாக சென்ற போது அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள் வானவேடிக்கையுடன் கிறிஸ்து அரசரின் சொரூப பவனியை வரவேற்றனர்.

இறுதியாக திருச் சொரூபம் ஆலயத்தினை வந்தடைந்துடன் பக்தர்களுக்கு கிறிஸ்து அரசரின் ஆசீர்வாதம் வழங்கி வைக்கப்பட்டது.

அருட்பனி வேராஜன், உதவிப்பங்குத்தந்தை, அருட்சகோதரரிகள், ஆலய பங்கு மேற்புப்பணி சபையினர் எனப் பலரின் பங்குபற்றுதலுடன் ஆலயத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றிருந்ததுடன் பெருமளவு மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers