கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கு அச்சு வைக்கும் நிகழ்வு

Report Print Suman Suman in நிகழ்வுகள்

கிளிநொச்சி, கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கான அச்சு வைக்கும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ஆலய வரலாற்றில் முதன் முதலாக 30.6 அடி உயரத்திலும்,12 அடி தள விரிவுகொண்டதும், 14 அடி பந்தல் விரிவுடையதுமான சித்திரை தேருக்கான அச்சு வைக்கும் நிகழ்வு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகத்தினரால் சிறப்பாக நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது.

ஆலய பூசை வழிபாடுகளுடன் சமய பெரியார்களின் ஆசியுடனும், கிருஸ்ணர் ஆலய பக்தர்களின் பங்கேற்புடனும் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் நல்லை ஆதின குரு முதல்வர், தெல்லிப்பளை துர்க்கா தேவி ஆலய தர்மகத்தா ஆறு திருமுருகன், கிளிநொச்சி சின்மயா மிசன் குரு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஆலய குருக்கள், நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.