பிரான்ஸில் வைகுண்ட ஏகாதசி விரத நாள் அனுஷ்டிப்பு

Report Print Nesan Nesan in நிகழ்வுகள்

வைகுண்ட ஏகாதசி விரத நாளை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு நிகழ்வு நேற்று மிகவும் பக்திப்பூர்வமாக நடைபெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் சுவசிலுறுவாவில் அஷ்டலட்சுமி சமேத மகாலட்சுமி உடனுறை சமேத சிறி வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் பிரதம குரு ஏரம்பநாத குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

இந்துக்கள் புனித நாளாக ஒரு நாள் முழுவதும் உணவு இன்றி உபவாசம் இருந்து திருமாளை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு பரமபதம் அடைவதற்காக இந்த நாளை அனுஷ்டிக்கின்றனர்.