மன்னாரில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற ஒளி விழா

Report Print Ashik in நிகழ்வுகள்

மன்னார் வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஒளி விழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த விழா இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் வலயக்கல்வி பணிமனையில், வலயக்கல்வி பணிப்பாளர் ஜே.கே.பிரட்லி தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, விருந்தினராக முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன் உற்பட வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது கிறிஸ்மஸ் கீதங்கள் இசைக்கப்பட்டதோடு, நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers