ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - வத்தளை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கொடியேற்ற நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை மஹோற்சவ திருவிழா முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வரை தினமும் காலையிலும், மாலையிலும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு கொடிஸ்தம்ப பூஜைகள் நடைபெறும் எனவும் ஆலய அறங்காலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் எதிர்வரும் 20ஆம் திகதி முத்தேர் பவனி இடம்பெறவுள்ளது, தொடர்ந்தும் 22ஆம் திகதி பால்குட பவனியும் தெப்பத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் 25ஆம் திகதி மாலை 6 மணி முதல் வைரவர் மடை இடம்பெற்று வருடாந்த மஹோற்சவ திருவிழா இனிதே நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers