ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் பட்டிப் பொங்கல் சிறப்பு பூசை

Report Print Kumar in நிகழ்வுகள்

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் பட்டிப் பொங்கல் சிறப்பு பூசை வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

பொங்கல் பொங்கி, பசுக்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து, தீப ஆராதனைகள் செய்யப்பட்டு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆலயத்தின் பிரதகுரு தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

உழவுத் தொழிலில் உழவனுக்கு உறுதுணையாய் இருக்கும் பசுக்களுக்கு பொங்கல் பொங்கி மரியாதை செய்யும் பட்டிப் பொங்கல் இன்றாகும்.

தமிர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கும் பட்டிப்பொங்கல் காலம் காலமாக முக்கியத்துவம் பெறும் கால்நடைகளுக்கான பண்டிகை ஆகும்.

மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக பட்டிப்பொங்கல் திகழ்கின்றது.