வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இம்முறை புதிதாக உருவாக்கப்பட்ட சித்திரத்தேரானது இன்று காலை பவனி வந்துள்ளது.
சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்த கந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக 2 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட 24 அடி உயரமும் 9 அங்குலமும் கொண்ட திராவிட மரத்தேர் நேற்று வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று முருகப்பெருமான் பிரதான வீதியூடாக பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற சித்திரத்தேர் பவனியில் பல நூற்றிற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.