மன்னார் மடுமாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Report Print Ashik in நிகழ்வுகள்

மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் நேற்றையதினம் கொடியேற்றத்துடன் வெகு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.

மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் இறைவேண்டலை முன்னெடுத்த பின்னர் மடுமாதா திருத்தல பரிபாலகர் அருட்பணி ச.ஜொ.பெப்பி சோசை அடிகளார் மடுமாதா திருத்தலக் கொடியினை ஏற்றி வைத்துள்ளார்.

பின்னர், மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் திருத் தந்தையின் கொடியினையும், தமிழ் மறையுரைஞர் அருட்பணி போல் நட்சேத்திரம் அ.ம.தி அடிகளார் மற்றும் சிங்கள மறையுரைஞர் அருட்பணி அசங்க அ.ம.தி அடிகளார் ஆகியோர் இலங்கைத் திருச்சபைக் கொடியினையும் ஏற்றி வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரதான ஆலயத்தில் மாலை வழிபாடுகள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெற்றன.

இத் திருவிழாவிற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. கணிசமான மக்கள் வழிபாடுகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers