வவுனியா - புதுக்குளம் சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம்

Report Print Theesan in நிகழ்வுகள்

வவுனியா - புதுக்குளம் சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான இத்திருவிழா எதிர்வரும் 01ஆம் திகதி வைரவர் சாந்தியுடன் நிறைவுபெற உள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி ஆலயத்தின் புது வரவான சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளதுடன், தேர் திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி காலை 10.45 மணிக்கு இடம்பெறும்.

தேர் திருவிழா தினத்தன்று அடியார்கள் நேத்திக்கடன்களை செய்வதுடன் பத்து தினங்களும் மகேஸ்வர பூசையும், தாக சாந்தியும் வழங்கப்பட உள்ளது.

தினமும் காலை 7.30 மணிக்கு உதய பூசையுடன் ஆரம்பமான திருவிழா மாலை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று விநாயகப் பெருமானின் உள்வீதி, வெளிவீதி உலா வருதல் உடன் நிறைவுறும்.

திருவிழாவின் பத்து தினங்களிலும் விசேட இசை நிகழ்வு இடம்பெறும் எனவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.