வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய சங்காபிஷேகம்

Report Print Thileepan Thileepan in நிகழ்வுகள்

வவுனியா - சாந்தசோலை, ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் 108 சங்குகளுடன் சங்காபிஷேகம் இன்று நடைபெற்றுள்ளது.

ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் பெருவிழா கடந்த 01ஆம் திகதி ஆரம்பமாகியது.

இந்நிலையில், 10ஆம் நாளான இன்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றதுடன், மகாறம்பைக்குளம் புளியடி சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து பால்காவடி , செடில்காவடி , பாற்செம்பு, தீச்சட்டி போன்றன பிரதான வீதியுடாக ஆலயத்தினை வந்தடைந்தது.

11ஆம் நாளான நாளையதினம் அம்பாள் கிராம வலம் வரவுள்ளதுடன், 12ஆம் நாள் வைரவர் பூஜையுடன் நிறைவு பெறவுள்ளது.

Latest Offers