இந்துக்களின் விசேட விரதங்களில் ஒன்றாகிய கேதாரகௌரி விரதத்தின் கௌரிகாப்பு கட்டும் நிகழ்வு வவுனியாவில் உள்ள பல ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.
கடந்த 8ஆம் திகதி கேதார கௌரி விரதம் ஆரம்பமாகியதுடன் 21 நாட்கள் அனுஷ்டிக்கப்பட்டு தீபாவளி தினம் அன்று கௌரி காப்பு கட்டும் நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது.
வரன் வேண்டியும், கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் குறித்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
தீபாவளி தினமான இன்றைய தினம் கௌரிகாப்பு கட்டுவதற்காக பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் ஆலயத்திற்கு வருதை தந்து விசேடஅபிஷேகம், ஆராதனைகள், பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தனர்.