நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவசிதம்பரத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Report Print Theesan in நிகழ்வுகள்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா - வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இன்று காலை 8.30 மணியளவில் இந்நினைவு தின நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சிவசிதம்பரத்தின் திருவுருவச்சிலையை நிறுவிய முருகேசு சிற்றம்பலம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.தணிகாசலம், நகரசபை உறுப்பினர்கள், தமிழ்மணி அகளங்கன், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.