வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்

Report Print Thileepan Thileepan in நிகழ்வுகள்

உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் கார்த்திகை தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

கார்த்திகை தீப திருநாள் வவுனியாவிலும் வீடுகள் மற்றும் ஆலயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆலயங்களில் வாழைக்குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப்பந்தம் ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ள நிலையில் இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...