செட்டியார்தெரு விநாயகர் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட கார்த்திகை தீபம்

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - 11, செட்டியார்தெருவில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

இன்றைய தினம் மாலை ஏழு மணியளவில் குறித்த நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

முதலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

வசந்த மண்டப பூஜையின் பின்பு தீபங்கள் ஏற்றப்பட்டு கோபுரவாசலில் சொக்கப்பானை எரிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.