மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற ஆரூத்திரா தீர்த்தோற்சவம்

Report Print Kumar in நிகழ்வுகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கடந்த பத்து தினங்களாக திருவெம்பாவை உற்சவம் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஆலயத்தில் விசேட பூஜைகள், ஆரூத்திரா அபிஷேகம் என்பன இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில், இன்று அதிகாலை தீர்த்தோற்சவம் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த உற்சவத்தில் மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் தீர்த்த உற்சவம் நிறைவுபெற்றதும், ஆலயத்தில் திருப்பொன்னூஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தவகையில், மட்டக்களப்பு பெரியகல்லாறில் உள்ள சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம் மற்றும் பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய தீர்த்தோற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

இதன்போது விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பெருமளவான அடியார்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.