மூதூரில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின விழா

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்

“அவள் தைரியமானவள் - நாட்டிற்கு பலமானவள்” எனும் கருப்பொருளில் திருகோணமலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த விழா இன்று மூதூர் பிரதேச செயலகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

இவ் விழாவின் போது விழிப்புணர்வு வீதிப் பேரணியும், கலை நிகழ்ச்சிகளும், தெரிவு செய்யப்பட்ட சிறந்த பெண்களுக்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மூதூர் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.