சார்வரி புத்தாண்டையொட்டி ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

Report Print Thirumal Thirumal in நிகழ்வுகள்

மலர்ந்திருக்கும் சார்வரி புத்தாண்டை முன்னிட்டு மலையகத்திலுள்ள இந்து ஆலயங்களில் மிகவும் அமைதியான முறையில் வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 34ஆவது வருடமான 'சார்வரி' சித்திரைப் புதுவருடம் நேற்றிரவு மலர்ந்தது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சார்வரி புதுவருடம் நேற்றிரவு 7.26 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நேற்றிரவு 8.23 மணிக்கும் புதுவருடம் பிறந்துள்ளது.

என்ற போதும் இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வீடுகளிலேயே இருந்து புத்தாண்டை கொண்டாடுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே இந்து மக்கள் இல்லங்களுக்குள்ளேயே ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டு புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, சமூக இடைவெளியை பேணி ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் பிரதம குருக்கள் பூர்ண சந்திராணந்த தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.