கேரள மாநிலத்தின் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் சிறப்புமிக்க மகர விளக்கு பூஜை இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி ஆலயத்தின் நடை திறக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் மகர விளக்கு பூஜை நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில் இதன் ஒருபகுதியாக 5.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெற்றுள்ளது.
பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இதனை காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் இலட்சக்கணக்கில் திரள்வார்கள்.
என்ற போதும் இம்முறை கொரோனா தொற்று அச்சம் காரணமாக நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.