யாழை போன்று மட்டக்களப்பிலும் IBC-தமிழின் ஒரு கைத்தொழில்பேட்டை

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்

மட்டக்களப்பின் முதலாவது IBC-தமிழ் கைத்தொழில்பேட்டை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட IBC-தமிழின் முதலாவது கைத்தொழில் பேட்டை வெற்றியுடன் பயணித்து, கிளைகள், காட்சியகங்கள் என்று உள்ளூர் மற்றும் புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகின்ற நிலையில், மட்டக்களப்பிலும் அதுபோன்ற ஒரு கைத்தொழில்பேட்டை அமைக்கப்பட்டுவருகின்றது.

கிழக்கின் பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக IBC-தமிழ் குழுமம் மேற்கொள்கின்ற பல்வேறு முயற்சிகளின் ஒரு அங்கமாக இந்த கைத்தொழில்பேட்டை மட்டக்களப்பின் கும்புறுமூலை பிரதேசத்தில் அமைய இருப்பதாகவும், மே மாதத்தின் முதல் வாரத்தில் இந்த கைத்தொழில்பேட்டை ஆரம்பித்துவைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கின்றார் IBC-தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் அவர்கள்.Latest Offers