திம்புலாகலை சொறுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு

Report Print Navoj in விழா
திம்புலாகலை சொறுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு

பொலன்நறுவை மாவட்டத்தின் திம்புலாகலை சொறுவில், அருள்மிகு புதுவெளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் உற்சவம் நேற்று (22) நடைபெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (19) ஆலய திருக்கதவு திறக்கப்பட்டு வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பமாகி, கல்யாணக் கால் நாட்டும் நிகழ்வு மற்றும் நெல் குற்றல், குளிர்த்தியாடுதல் நிகழ்வுடன் நேற்று (22) உற்சவம் இனிதே நிறைவு பெற்றுள்ளது.

இதில் பொலன்நறுவை மாவட்ட தமிழ், சிங்கள பக்தர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பக்த அடியார்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களுடைய வேண்டுதல்களை வேண்டி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியுள்ளார்கள்.

உற்சவகாலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பூசைகள்யாவும் ஆலய பூசகர் இ.கந்தையா தலைமையில் நடைபெற்றுள்ளது.

பூசைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயமானது பெரும்பான்மை இன மக்கள் வாழும் பிரதேசத்தின் மத்தியில் காணப்படும் ஆலயமாகவும், பெரும்பான்மை மக்கள் அதிகளவில் வருகைத் தந்து நேர்த்திகளை வழங்கி பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயமானது 600 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகவும், தற்போது இங்கு 375 தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments