ஆசீர்வாதம் மிக்க ஹஜ் பண்டிகையாக அமையட்டும்! ஜனாதிபதி வாழ்த்து

Report Print Kamel Kamel in விழா

ஆசீர்வாதம் மிக்க ஹஜ் பண்டிகையாக அமையட்டம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஹஜ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும்,

இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆசீர்வாதம் மிக்க ஹஜ் பண்டிகையாக அமையட்டும்.

அன்னியோன்ய மரியாதை ஊடாக மானுட சகோதரத்துவத்தின் உன்னதத்தை இதயத்தை நிறுத்திக் கொண்டு அதன் ஊடாக சகவாழ்வின் புதிய உயிர்ப்பு உருவாக்கும் ஹஜ் பண்டிகையாக அமையட்டும்.

மனிதம், ஈகை கொடையின் புனித பண்புகளை பறைசாற்றும் ஓர் பண்டிகையாக ஹஜ் பண்டிகை காணப்படுகின்றது.

சமய பக்தி பற்றிய அர்ப்பணிப்பினை எடுத்துக் காட்டும் ஓர் பண்டிகையாக ஹஜ் பண்டிகை அமைந்துள்ளது என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments