தேசிய கைதிகள் நலன்புரி தினம் இன்று அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில்...

Report Print Kamel Kamel in விழா

தேசிய கைதிகள் நலன்புரி தினம் இன்று அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான பிரதான நிகழ்வு பொரளையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

சிறந்த ஆண் சிறைக் கைதி, சிறந்த பெண் சிறைக் கைதி, புத்தாக்க படைப்பாளி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கைதிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

அமைச்சர் சுவாமிநாதன் இதற்கான விருதுகளை வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments