நல்லூரை நோக்கி படையெடுக்கும் காவடிகள்: நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

Report Print Thamilin Tholan in விழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நோக்கி பறவைக்காவடிகள், செதில் காவடிகள் படையெடுத்து வருகின்றன.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடாநாட்டின் தூர இடங்களில் இருந்தும் பறவைக்காவடிகள் ஆலயத்தை நோக்கி வருகை தருவதை காணமுடிகிறது.

தேர்பவனி முற்பகல் 09.30 மணிக்கு நிறைவுற்ற நிலையில், தற்போது வரை ஆலயத்தில் முருகனின் பக்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

மேலும், பக்தர்களின் பறவைக் காவடிகளும் ஆலயத்தை நோக்கி வருகைத்தந்த வண்ணமுள்ளன.

அத்துடன் ஆலய வீதியில் செதில் காவடிகள், ஆடி வந்து பல அடியவர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். அத்துடன், சிறுவர்கள் சிலரும் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றியமையை காண முடிந்தது.

இதேவேளை, நாளைய தீர்த்தோற்சவத்தின் போது தேர்த் திருவிழாவை விடவும் பல மடங்கு அதிகமான காவடிகள் ஆலயத்திற்கு வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.