நல்லூர் திருவிழாவில் நேர்த்திக்கடன் செய்யும் போது மயங்கிய இளைஞன்

Report Print Thamilin Tholan in விழா

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு அங்கப்பிரதட்சணம் மேற்கொண்ட இளைஞரொருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று நல்லூர் கந்தனின் தேர்பவனி இடம்பெற்ற போது, தேர்பவனியைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டு நேர்த்திக் கடன் நிறைவேற்றியுள்ளனர்.

முற்பகல் - 09.30 மணியளவில் தேர் இருப்பிடத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து சில நிமிடங்களின் பின்னர் அங்கப்பிரதட்சணம் செய்து அடியவர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அப்போது பெருமளவு பக்தர்களுக்கு மத்தியில் ஒன்றன் பின் ஒன்றாக அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டிருந்தவர்களில் ஒருவர் திடீரென மயக்கமுற்றார்.

இதனையடுத்து ஆலயத் தொண்டர்கள் அவரை அப்பகுதியிலிருந்து சற்று அப்புறப்படுத்தி, மற்ற அடியார்களுக்கு நேர்த்திக்கடன் செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தார்கள்,

மேலும், மயக்கமுற்ற இளைஞரின் முகத்திற்கு நீர் தெளித்துள்ளார்கள். இதனையடுத்து மயக்கமடைந்த குறித்த இளைஞர் மயக்கம் தெளிந்து தனது நேர்த்திக் கடனை நிறைவு செய்துள்ளார்.