சுவிஸின் மலை உச்சியில் பொங்கிய லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய இளம் தொண்டர்கள்

Report Print Dias Dias in விழா

சூரியன் இல்லாவிட்டால், உலகில் எதுவுமே நடைபெறாது. அனைவரும் வாழ, அனைத்தும் வாழ, நாள்தோறும் வலம் வரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் இன்று பொங்கல் பொங்கி தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த நாளில் காலையில் சூரிய உதயமாகும் போது பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைத்து பூசை செய்வதுடன், ஆலயங்களிலும் விசேட பூஜைகள் நடைபெறும்.

எனினும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பொங்கல் பொங்கினாலும், அதை சூரியனுக்கு படைப்பதென்பது சற்று கடினமான விடயம் தான்.

இதற்கு காரணம் தற்போது அங்கு நிலவும் கடும் குளிருடனான காலநிலை.

இதனால் காலை வேளையில் சூரியனை காண்பதே அரிதான விடயம் தான்.

இதையும் தாண்டி சுவிட்ஸர்லாந்தில் வாழும் லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் இளம் தொண்டர்கள் மலை உச்சிக்கு சென்று பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைத்து கொண்டாடியுள்ளார்கள்.

சுவிஸில் உள்ள 1797 மீட்டர் உயரமுடைய Rigi மலையில் இன்று காலை குளிருக்கு மத்தியிலும் பொங்கல் பொங்கியுள்ளார்கள்.

இது தொடர்பான புகைப்படங்களை குறித்த இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

நாடு கடந்து சென்றாலும் தமிழர்கள் தங்களது கலாச்சாரங்களையும், விழாக்களையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.