மகரசங்கராந்தியில் சூரியனை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா?

Report Print Akkash in விழா

சூரியன் தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு பிரவேசிக்கும் காலத்தை “மகரசங்கராந்தி” என்று குறிப்பிடுவதாக சிவஸ்ரீ வைத்தீஸ்வர குருக்கள் தெரிவித்தார்.

தமிழர் திருவிழாவான தைப்பொங்கல் குறித்து லங்காசிறி செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த தைத்திருநாள் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் அவசியமானது எனவும், சூரியனுக்கு நன்றி செலுத்த சிறந்த நாள் இது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மகரசங்கராந்தி என்ற புண்ணி காலத்தில் சூரிய வழிபாட்டை செய்தால் உடல், உள்ளம் என அனைத்தும் சக்தி பெறுகின்றதாக தர்ஷக ஷர்மா தெரிவித்தார்.

இவ்வாறு உடலும், உள்ளமும் சக்தி பெறுவதனூடாக ஆன்மாவின் சக்தியை நாம் உணரக்கூடியதாக இருக்கும்.

ஆக உள்ளம், உடல், ஆன்மா இவை மூன்றும் ஒன்றிணைந்து செயற்படும் போது நாம் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றியளிக்கும் எனவும் குறிப்பிட்டார்.