தைத்திருநாளில் சிவன் கோயிலில் ரணில், ரவி மற்றும் சுவாமிநாதன்

Report Print Akkash in விழா

தமிழர் பண்டிகையான தைத்திருநாளை முன்னிட்டு கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் நடைபெற்றதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இன்று காலை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வருகைதந்த இவர்கள் சிவபெருமானின் தரிசனத்தை பெற்றுள்ளனர்.

அத்துடன் இந்து சமய விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் பொங்கல் பானையில் அரிசியை போட்டு பொங்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து கோயிலுக்கு வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டதுடன், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.