கச்சதீவு சிங்கள மயமாகிறதா?

Report Print Samy in விழா

அண்மையில் நடைபெற்று முடிந்த கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் இந்த வருடம் தமிழில் மட்டுமன்றி சிங்களத்திலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, தென்னிந்தியத் தமிழ் மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இம்முறை கச்சதீவு திருவிழாவிற்கு கணிசமானளவு சிங்கள மக்களும் வருகை தந்திருந்தனர்.

காலி மறைமாவட்ட ஆயர் அருட்திரு ரேமண்ட் விக்ரமதுங்க சிங்களத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

அவர் தனது உரையில், மதத்தால், இனத்தால், மொழியால் பிரிந்து கிடக்கும் இலங்கை மக்களை ஒன்றுபடுத்தவும், ஒற்றுமைக்காகவும் மட்டுமே சிங்கள மொழியில் திருப்பலி நடத்தப்படுகிறது என்றார்.

இலங்கைக் கடற்படையினரே அந்தோனியார் திருச்சொரூபத்தை தூக்கிச் சென்றனர்.

2009ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் கச்சதீவில் இலங்கை கடற்படையினரின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது.

இந்த வருடம் கச்சதீவில் சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுத்ததன் மூலம், கச்சதீவையும் சிங்களமயமாக்க இலங்கை அரசு முயற்சி செய்கிறதா என்ற கேள்வி தமிழ்மக்கள் மனிதில் எழுந்துள்ளது.

இதனைவிட கச்சதீவில், எதிர்காலத்தில் அந்தோனியார் தேவாலயம் அருகிலேயே புத்த விஹாரையும் கட்ட முயற்சி நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இலங்கை, இந்திய தமிழர்கள் யாவரும் கச்சதீவு தமிழ் மக்களுடைய தீவாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் அந்தோனியார் பெருநாள் இந்த வருடம் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers