படையெடுத்து வரும் பக்தர்கள்! அந்தோனியாரின் திருச்சொரூப பவனியால் பரபரப்பாக காணப்படும் கொழும்பு

Report Print Akkash in விழா

கொழும்பு - புனித அந்தோனியார் திருத்தலத்தின் 184ஆம் ஆண்டு திருவிழாவின் சிறப்பு மாலை ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த ஆராதனைகள் நேற்று மாலை கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதிவண. மெல்கம் கார்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, புனித அந்தோனியார் திருத்தலத்தின் 184ஆம் ஆண்டு திருவிழா இன்று நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு நேற்று தொடக்கம் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு மாற்று பாதைகளில் வாகனங்கள் செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் மக்கள் படையெடுத்து வந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும், கொழும்பு நகரம் முழுதும் வண்ண விளக்ககுகளால் அலங்கரிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகர் சாதாரணமாக பரபரப்பாகவே காணப்படும், எனினும் சிறப்பு மிக்க புனித அந்தோனியார் திருத்தலத்தின் திருவிழாக்காலம் என்பதால் பெரும் பரபரப்பாக இருக்கின்றது.

வீதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவதால் திருடர்களின் நடமாட்டமும் அதிகமாக காணப்படும் என்பதால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட புனித அந்தோனியார் திருவிழாவில் இன்று புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.