இயற்கை எமக்களித்த ஓர் இனிய திருநாள்! ஆடிப்பிறப்பு என்றால் என்ன?

Report Print Akkash in விழா

ஆடிப்பிறப்பின் முதல் நாளாகிய இன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்புபூஜைகள் நடைபெற்றதுடன், பக்தர்கள் ஆலயங்களை நோக்கி படையெடுத்து இருந்தனர்.

அந்த வகையில் இன்று கொழும்பு - கதிரேசன் வீதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டதுடன், அம்மனுக்கு விசேl பூஜைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆடிப்பிறப்பு என்றால் என்ன?

சைவ மக்கள் தை மாதத்து முதல் நாளை சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும்வகையில் தைப்பொங்கள் பொங்கி வழிப்பாடு செய்வார்கள்.

அதேபோலட ஆடி மாதத்தின் முதல் நாள் ”ஆடிப்பிறப்பு“ என்று கூறப்படுகின்றது.

தைத்திங்கள் முதல் மார்கழி வரையான பன்னிரு மாதங்களுக்குரிய விரதங்கள், திருவிழாக்கள் முதலியவற்றை இவர்கள் முறையாக மேற்கொண்டு வழிபட்டு ஆன்மீக ஒளியில் அமைதியாக வாழ்வர்.

அந்த நிலையில் இன்று பிறக்கும் ஆடி மாதத்தின் முதல் நாளை ”ஆடிப்பிறப்பு“ என்று போற்றி பெறுமையுடன் வரவேற்பர்.

தை மாதம் முதல் ஆனி வரையான காலப்பகுதியை உத்திராயணம் என்றும்ஆடி முதல் மார்கழி வரையானதை தட்சிணாயம் என்றும் கூறுவர்.

மாரி காலத்தின் ஆரம்பம் ஆடியிலாகும். பச்சையரிசியில் தைப்பொங்கள் பொங்கிய மக்கள், ஆடிப்பிறப்பில் இனிப்பு கூழ் காய்ச்சி முக்கனிகளான மா, பலா, வாழைப்பழங்களுடன் இல்லுறை தெய்வங்களுக்கு படைத்து வழிப்பாடு செய்து கொண்டாடுவார்கள்.

ஆறு மாதமாய் வாட்டி வதக்கி உலர்த்திய வெப்பம் காலநிலை படிப்படியாக குறைந்து மாரி காலத்தில் வாசலை அடைகிறது.

உழவர்கள் நெற்பயிர் செய்கைக்காக வயலை உழுது பயன்படுத்த ஆரம்பமாகும்.

பல ஆலயங்களில் வருடாந்த மாகோற்சவங்கள் இம் மாதத்திலும் அடுத்து வரும் மாதங்களிலும் சிறப்பாக இடம்பெறும். இதை தொடர்ந்து இந்துக்கள் பல புனித ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள்.

கூழை குடித்தேனும் கூலி தொழில் புரிந்தேனும் கூட்டுக் குடும்பமாய் குதூகலமாய் இயற்கையுடன் இணைந்த வாழ்வு வாழ்ந்தார்கள் எம் முன்னோர்கள்.

ஆடி பிறப்பானது இயற்கை எமக்களிக்கும் ஓர் இனிய திருநாளாகும். ஆடி பிறப்பென்றதும் எம்மனதில் இயல்பாய் தோன்றும் பெரியார் நவாலியூர் சோமசுந்தர புலவராவார்.

அத்தோடு அவரின் பாடலாகிய “ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை“ என்பதுமே இன்று பாசிப்பயறு சேர்ந்த ஆடி கூழின், கொழுகட்டையின் இனிமையை மட்டு மல்லாதது புலவரின் பாடலின் இனிமையையும் சேர்த்து சுவைக்கலாம்.

புலவரது பாடலொன்றில் அன்றைய நீர் இறைக்கும் முறை பற்றி குறிப்பிட்டுள்ளது. அன்று நால்வர் ஒற்றுமையாய் ஒன்றாய் இணைந்து தோட்டத்திற்குள் நீர் பாய்ச்சி பயிர் வளர்த்தனர். இதனூடு மனித ஒற்றுமையை கூட்டுறவையும் காண முடிகின்றது.

மேலும் ஆடி மாதத்தில் ஆடி அம்மாவாசை விரதமும் ஆடி செவ்வாய் விரதமும் முக்கிய இடம் வகிக்கின்றன.

தந்தையின் இறந்த திதியை தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை தினத்ததில் விரதமிருந்து சிரார்த்தம், தர்ப்பணம் என்பவற்றை செய்வார்கள்.

அடுத்து ஆடி மாதத்து செவ்வாய் தோறும் விஷேசமாக பெண்கள் விரதமிருந்து வழிப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.