ராஜபக்ஷர்களுக்கு கடல் தாண்டியும் ஆபத்து! மஹிந்தவின் நெருங்கிய நண்பன் படுதோல்வி

Report Print Vethu Vethu in நிதி
1713Shares

இலங்கையுடன் நெருக்கிய நட்பு நாடாக செயற்படும் சீஷெல்ஸில் புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சீஷெல்ஸில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் கடந்த 39 வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயக முன்னணி வெற்றியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய அந்நாட்டு ஜனாதிபதியும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பருமான ஜேம்ஸ் மிசெலின் கட்சி தோல்வியடைந்துள்ளது.

நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும்கட்சி 10 ஆசனங்களையும் ஜனநாயக முன்னணி 15 ஆசனங்களையும் பெற்றுள்ளன. 1977ம் ஆண்டிலிருந்து சீஷெல்ஸின் ஆட்சியாளராக ஜேம்ஸ் மிசெல் செயற்பட்டு வந்தார்.

கடந்த ஆட்சியின் போது சீஷெல்ஸ் நாட்டுடன் நெருக்கமான உறவினை கொண்டிருந்த மஹிந்த, பெருமளவு கறுப்பு பணத்தை அங்கே பதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மிகவும் குறைந்தளவான மக்கள் வாழும் தீவான சீஷெல்ஸில் இலங்கையின் வங்கி கிளையொன்று இயங்கி வருகிறது. அதனூடாக ராஜபக்ஷர்கள் பெருமளவு பணத்தை பறிமாற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments