வவுனியாவில் உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட தேநீரில் புழு மற்றும் எறும்புகள்!

Report Print Thileepan Thileepan in உணவு

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட தேநீரில்புழு இருந்த சம்பவம் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி நிலையமாக இயங்கும் உணவகம்ஒன்றுக்கு சென்ற சிலர் அங்கு உணவருந்தி விட்டு தேநீர் பெற்றுள்ளனர்.

இதன் போதுஒரு தேநீருக்குள் புழு இருந்ததுடன் பிறிதொரு தேநீருக்குள் எறும்புகள் மற்றும்தூசுப் பொருட்கள் சில காணப்பட்டன.

இதனையடுத்து குறித்த கடை உரிமையாளரிடம் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவர்அதனை மீளப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த கடையில் பாடசாலைக்கு செல்ல வேண்டிய சிறுவன் ஒருவரும் பாடசாலைசெல்லாது கடையில் வேலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers