குமார் சங்ககார உட்கொண்ட 38 இலட்சம் பெறுமதியான உணவு! எப்படி தயாரிக்கப்பட்டது தெரியுமா?

Report Print Shalini in உணவு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவுக்கு வழங்கப்பட்ட 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான உணவு எப்படி தயாரிக்கப்பட்டது என்பது தொடர்பில் செய்தி வெளிவந்துள்ளது.

நுவரெலியாவில் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றில் குமார் சங்ககாரவுக்கு அண்மையில் சிறப்பு விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது அந்த நட்சத்திர உணவகத்தில் மாஸ்டர் ஷெஃப் விராஜ் ஜயரட்னவினால் தயாரிக்கப்பட்ட 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான இனிப்பு உணவு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாமரைக் கோபுரம் ஒன்றுடன் அமைக்கப்பட்ட 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த இனிப்பு வகை எப்படி தயாரிக்கப்பட்டது, எவ்வாறான பொருட்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி மாஸ்டர் ஷெஃப் விராஜ் ஜயரட்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மடகஸ்கார் சொக்கலேட்டை அடிப்படையாக வைத்தே இந்த உணவு தயாரிக்கப்பட்டது.

pistachio sauce (பிஸ்தாப்பருப்பு சோஸ்) நுவரெலியாவில் விளைந்த ஸ்ட்ரோபெரியில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜெலி.

பிரான்சுக்குரிய உயர்தர மது வகையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஐஸ்கிறீம் (Dom Pérignon)

பின்னர் சொக்கலேட்டில் கண்டியன் நடனம் வரையப்பட்டுள்ளது. இது முல் ஒன்றைப்பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் இலங்கையில் ஒரு சின்னமாக வரவிருக்கும் தாமரைக் கோபுரத்தை சீனியால் வடிவமைத்திருந்தோம் என மாஸ்டர் ஷெஃப் விராஜ் ஜயரட்ன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த உணவை தயாரிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்ட புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.