வடக்கின் கில்லாடியானது பாடுமீன்!

Report Print Amuthan in கால்பந்து
வடக்கின் கில்லாடியானது பாடுமீன்!

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 97ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ”வடக்கின் கில்லாடி” எனும் கால்பந்தாட்ட தொடரில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை சுவிகரித்து.

யாழ். கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் பல்லாயிரக்கனக்கான ரசிகர்கள் அணிதிரண்டிருக்க நாவந்துறை சென்.மேரிஸ் விளையாட்டக்கழகத்தை எதிர்த்து பாடுமீன் விளையாட்டுக்கழகம் மோதியது.

பெரும் பரபரப்பாகவும், இரண்டு அணிகளும் பலம்பொருந்திய அணிகள் என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்போடு இப்போட்டி இடம்பெற்றது.

இதில் பனால்டி முறையில் சென்மேரிஸ் அணியை வீழ்த்தி வடக்கின் கில்லாடியாகியது பாடுமீன் அணி.

இந்த போட்டியின் போது பிரதம விருந்தினராக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments