புத்தர்சிலை மீது கால் வைத்த பிரபல வீரர்..! கோபத்தில் இலங்கை ரசிகர்கள்

Report Print Vino in கால்பந்து

போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புத்தர் சிலை ஒன்றின் மீது கால்வைத்த நிலையில் புகைப்படம் ஒன்றை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.

புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள தொட்டியொன்றில் தனது காலை வைத்திருப்பது போன்ற புகைப்படமொன்றை தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்களவர்களின் மதமான பௌத்த மதத்தின் கடவுளாக வழிபாடும் இந்த வேளையில் இவரின் பதிவானது, சிங்களவர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

குறித்த செயலினை கடுமையாக கண்டிப்பதாக வெளிநாட்டு செய்திப்பிரிவுகள் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த செய்தியால் இலங்கையில் உள்ள ரொனால்டோவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments