சம்பியனாகியது ஜோசவ்வாஸ் நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழகம்

Report Print Ashik in கால்பந்து

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் மன்னார் லீக்கில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான FA கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது நிறைவடைந்துள்ளது.

இந்த சுற்றுப் போட்டியானது நேற்று(13) செவ்வாய் 4.30 மணிக்கு மன்னார் லீக்கின் ஏற்பாட்டில் தாழ்வுபாடு ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் இரு அணிகளும் தமது பலப்பரீட்சையைக் காட்ட முயன்றும் போட்டி தொடங்கியதிலிருந்து முதல் பாதிவரை ஆட்டம் வங்காலை சென் ஆன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆட்ட முடிவின்போது இரு அணிகளும் 3-3 என சமனிலையில் காணப்பட்டது.

தொடர்ந்து தண்ட உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட இ.ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.

இதன் மூலம் FA கிண்ணத்திற்கான அடுத்த கட்ட போட்டிக்கு ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழகம் தகுதி பெற்றுள்ளது.

1ம் 2ம் இடங்களைப்பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மன்னார் உதைபந்தாட்ட லீக் தலைவர் டேவிட்சன் ஜெறாட், செயலாளர் ஞானராஜ், பொருளாளர் கோல்டன் டெனி, உப தலைவர்கள், உபசெயலாளர், உபபொருளாளர் மற்றும் ஆயிரக்கணக்கான உதைபந்தாட்ட இரசிகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Comments