ஜனாதிபதி கால்பந்தாட்ட போட்டிக்கான வெற்றிக்கிண்ணம் வழங்கும் நிகழ்வு

Report Print Gokulan Gokulan in கால்பந்து

21 அணிகள் கலந்து கொண்ட 2016 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி கால்பந்தாட்ட கிண்ண போட்டியில் அல் ஹுசைன் கல்லூரி வெற்றிக்கிண்ணத்தினை பெற்றுள்ளது.

வெற்றிக்கோப்பையை கையளிக்கும் நிகழ்வானது நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அல் ஹுசைன் கல்லூரியின் அதிபர், வெற்றியீட்டிய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த ஒன்பது வருடங்களாக இடம்பெற்று வரும் இந்த போட்டி கடந்த ஆண்டிலிருந்து ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments