மன்னாரில் நடைபெற்ற 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி

Report Print Yathu in கால்பந்து
175Shares

மன்னார் கால்பந்தாட்ட முதுநிலை சங்கத்தினால் வருடா வருடம் நடத்தப்படும் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியானது மன்னாரில் நடைபெற்றுள்ளது.

குறித்த போட்டியானது கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் அதன் இறுதிப் போட்டிகள் மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஆறு கழகங்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பனங்கட்டுகொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

குறித்த இறுதிப்போட்டியில் பிரதம விருந்தினராக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனும், கௌரவ விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனும் கலந்து கொண்டிருந்தனர்.